2020 ஐபிஎல் போட்டியின் முதல் சிக்ஸசரை பறக்கவிட்டவர் மற்றும் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் யார் தெரியுமா?2020-ipl-first-sixer-and-first-wicket

கொரோனா காரணமாக 2020 ஐபிஎல் போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்று இருந்துவந்த நிலையில் இன்று அபுதாபியில் ரசிகர்களே இல்லாமல் நடந்து வருகிறது. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய நேரப்படி அபுதாபியில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கியது. முதல் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டிகாக் இருவரும் களம் இறங்கினர். 2020 ஐபிஎல் போட்டியின் முதல் விக்கெட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பியூஸ் சாவ்லா வீழ்த்தினார்.

csk

நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சாகர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் சாவ்லா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேரினார்.

அதேபோல் 2020 ஐபிஎல் இன் முதல் சிக்ஸரை மும்பை இந்தியன்ஸ் அணியின் சவுரப் திவாரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் அபாரமாக பறக்கவிட்டார். இதுவே 2020 ஐபிஎல் இன் முதல் சிக்சர் ஆகும்.