Zero tolerance-ஆ? Zero Control-ஆ? தவெக அரசுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்த நயினார்.!



‘Zero Tolerance or Zero Control?’ BJP Chief Nainar Nagendran Slams TVK Government Over Women’s Safety

ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லைக்கு கண்டனம்:

TVK Vijay Vs Nainar Nagendran: சென்னையில் தவெக நிர்வாகி கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவல் வெளியாகிய நிலையில், இதுகுறித்த விஷயத்துக்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் வலைப்பதிவில், "Zero tolerance-ஆ? இல்லை, Zero Control-ஆ முதல்வரே? கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 

இதையும் படிங்க: Nainar Nagendran: பொங்கலுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி.!

வாய் கூசவில்லையா?

ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்பொழுதும் "zero tolerance"-ஐ உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய்கூசவில்லையா?

TN politics

தூயசக்தி?

முதலில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் காமக்கொடூரர்களை கட்டுக்குள் கொண்டுவந்து மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! அதற்குப் பின்பு "தூய சக்தி" என்று மார் தட்டுங்கள் முதல்வர் விஜய் அவர்களே!" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆட்சி பங்கு எங்கள் உரிமை' - காங்கிரஸ் போர்க்கொடி.. திமுக தலைமைக்கு தொடரும் சிக்கல்.!