அரசியல் தமிழகம் சினிமா

"தமிழகத்தின் உண்மையான தளபதி யார்..?" உதயநிதியின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Summary:

Who is tamilnadu real thalapathy

தமிழகத்தில் "தளபதி" என்ற பெயருக்கு அரசியலிலும் சரி சினிமா துறையிலும் சரி அதற்கு தனி மதிப்பு தான்.  இதற்கு காரணம் அரசியலில் ஸ்டாலினும் சினிமாவில் விஜயும் மாஸாக இருப்பது தான். 

ஆரம்பத்தில் இளைய தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் விஜய், சமீபத்தில் தளபதி என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 

திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள் தளபதி என்ற புனைபெயருடன் அழைத்து வரும் நிலையில் நடிகர் விஜய் தளபதி என்று அழைக்கப்படுவதை திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் எழுவதுண்டு. 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒருவர் "தமிழகத்தில் யார் உண்மையான தளபதி..? " என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

அதற்கு ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் அவர் "திரையுலக தளபதி என்றால் அது விஜய் அண்ணாதான் என பதிலளித்துள்ளார். அதேபோன்று திரையுலக தல என்றால் அது அஜித்தான்" என்று தெரிவித்துள்ளார்.  


 
உதயநிதி ஸ்டாலினின் இவ்வாறு அரசியல் மற்றும் சினிமாவை பிரித்து சமார்த்தியமாக அளித்தள்ள பதில் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. மேலும் அவர் யார் மனதையும் புண்படுத்தாமல் பதிலளித்தள்ளதை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர். 


Advertisement