முதலில் வந்தது முட்டையா, கோழியா?!.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த ப.சிதம்பரம்..!

முதலில் வந்தது முட்டையா, கோழியா?!.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த ப.சிதம்பரம்..!


which-came-first-the-chicken-or-the-egg-pa-chidambaram

பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த செருப்பு வீச்சு சம்பவத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரிய பா.ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாலும் டாக்டர் பா.சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், " பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்தார். டாக்டர் சரவணனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார். முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? வாழ்க சுதந்திரம்!" என்று பதிவு செய்துள்ளார்.