யாரு..? என்ன தப்பு செய்றீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்! டெண்டர் ஒதுக்கீட்டில் 3 அமைச்சர்களை மிரளவிட்ட CM விஜய்...! அமைச்சரவையில் வெடித்த பூகம்பம்...!!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டெண்டர் விவகாரம் தொடர்பாக மூன்று அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பணிகள் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என விஜய் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அமைச்சரவை மாற்றம் குறித்த அரசியல் பேச்சும் மீண்டும் எழுந்துள்ளது.
டெண்டர் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என அதிருப்தி
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய விஜய், சில அமைச்சர்கள் தங்கள் துறைகளில் அரசுப் பணிகளை மேற்கொள்வதிலும், டெண்டர் ஒதுக்கீடு செய்வதிலும் வெளிப்படையாகச் செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் மீது தனக்கு கடும் அதிருப்தி இருப்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திரிஷா விஜய் புத்தகமா..? எந்தப் பைத்தியக்காரனாவது வாங்குவானா..? நிச்சயமாக திமுகவினர் வாங்க மாட்டாங்க.. பரந்தாமன் ஆவேசம்..!!!
“யார், எந்தெந்த துறைகளில் தவறு செய்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; உங்களுக்கே அது புரியும்” என்று அமைச்சர்களிடம் விஜய் எச்சரித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
அமைச்சரவை மாற்றம் குறித்துப் பரவும் தகவல்
முதல்வரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, விரைவில் அமைச்சரவை மாற்றம் அல்லது சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்ற பேச்சு தவெக மற்றும் அரசு வட்டாரங்களில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே அரசின் முக்கிய இலக்கு என்ற கருத்தை இந்த எச்சரிக்கை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அமைச்சரவை அல்லது இலாகா மாற்றம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பாஜகவுக்கு உடைந்தையா..? நீதிபதி குழுவை திடீர்னு தூக்கியது ஏன்.. தவெக அரசுக்கு எதிராக கனிமொழி கடும் கண்டனம்..!!!