ஐயோ.. புள்ள! யாருச்சும் காப்பாத்துங்க.. அலறிய தாய்! 2 குழந்தைகளை 5-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை! அதிர்ச்சி வீடியோ..!!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் அருகே, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே வீசிய பின்னர் தானும் குதித்து உயிரிழந்துள்ளார். மவுண்ட் லெபனான் பகுதியில் உள்ள ஐந்து அடுக்கு பொது வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 42 வயதான பேட்ரிக் லென்ச் மற்றும் அவரது 8 வயது மகன், 6 வயது மகள் என மூவரும் உயிரிழந்தனர்.
இரண்டு குழந்தைகளையும் கீழே வீசிய தந்தை
மவுண்ட் லெபனான் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள பொது வாகன நிறுத்துமிடத்தின் மேல்தளத்திலிருந்து பேட்ரிக் லென்ச் தனது குழந்தைகளைத் தூக்கி கீழே வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரும் அங்கிருந்து குதித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவசரகால மீட்புக் குழுவினர், மூவருக்கும் சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த குழந்தைகள் 8 வயது ஜேம்ஸ் லென்ச், 6 வயது கரோலின் லென்ச் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலை இழப்பால் மன அழுத்தத்தில் இருந்ததாக மனைவி தகவல்
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இது திட்டமிட்ட கொலை மற்றும் தற்கொலை வழக்காகக் கருதப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை இழந்ததில் இருந்து பேட்ரிக் லென்ச் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது மனைவி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மனநல மருத்துவரைச் சந்திக்க அவர் திட்டமிட்டிருந்த நாளுக்கு முந்தைய தினமே இந்தச் சம்பவம் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததால் மவுண்ட் லெபனான் பகுதி மக்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர்.
Mount Lebanon - A devastating tragedy unfolded in Mount Lebanon, a suburban municipality situated south of Pittsburgh, Pennsylvania. Following a severe domestic dispute involving his ex-spouse, a 42-year-old man threw his two young children—an 8-year-old boy and a 6-year-old girl from the upper level of a municipal parking garage on Municipal Way near the town hall. Shortly after, the father jumped from the structure himself.
— NextMinute News (@nextminutenews7) November 7, 2026
இதையும் படிங்க: 15 வயதில் காணாமல் போன சிறுமி! 500 நாட்களுக்கு பின்... ஆன்லைன் விளையாட்டு மூலம் ரகசியமாக உதவி கேட்டு சிறுமி மீட்பு! பகீர் சம்பவம்...!!!