அதிர்ச்சியில் விஜய்! எங்களுக்கு வேணாம்! விஜய் கொடுத்த முழு பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்!



vijay-meets-karur-stampede-victims-families

கரூரில் நிகழ்ந்த துயரமான பரப்புரைக் கூட்ட விபத்து தமிழக அரசியல் வட்டாரத்தையும் சமூகத்தையும் பெரிதும் உலுக்கியது. இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான நீதியும் ஆறுதலும் குறித்து தொடர் கவனம் நிலவுகிறது.

அதிர்ச்சிக்குள் தள்ளிய கரூர் சம்பவம்

செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் கடுமையான காயங்களுடனும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி CBI விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: BREAKING: விஜய் எடுத்த அதிரடி முடிவு! இத யாரும் எதிர்பார்கல....!

மாமல்லபுரத்தில் விஜய் சந்திப்பு

இந்நிலையில், மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதற்காக முன்தினம் 2 பேருந்துகள் மூலம் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து 5 நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்.

சில குடும்பங்கள் பங்கேற்க மறுப்பு

நேற்று காலை 8.15 மணியளவில் விஜய் நிகழ்வில் கலந்துகொண்டு, 37 குடும்பங்களில் இருந்து வந்த 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உயிரிழந்த அஜிதா உள்ளிட்ட நான்கு குடும்பங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் குடும்பம் விஜய் வழங்கிய இருபது இலட்சம் ரூபாயை நேரடியாக திருப்பி அனுப்பியுள்ளனர் என கூறப்படுகிறது.

விஜய் நேரில் அவர்களை முதலில் சந்திக்காததிலேயே அதிருப்தி ஏற்பட்டதால் தான் பணத்தைத் தள்ளுபடி செய்ததாக அந்தக் குடும்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் விஜயும் அவரது ஆதரவாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கரூர் நெரிசல் விபத்தின் பின்னணியில் இத்தகைய நடவடிக்கைகள் மேலும் விவாதங்களையும் அரசியல் பரிமாணங்களையும் உருவாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய அரசியல் பிரபலம்! இத யாரும் எதிர்பார்க்கலையே....