ஒரு நொடி லேட் ஆகியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.
மும்பை தாதர் ரயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரயில் அடியில் பாய்ந்த இளைஞரை பெண் காவலர் ஏ.ஏ. நார்வடே மற்றும் அவரது சக காவலர்கள் துரிதமாக மீட்டு உயிரை காபாற்றிய வீடியோ சமூக இனையதில் வைரலாகி வருகிறது.
ஓடும் ரயிலின் அடியில் பாய்ந்த இளைஞர்
தாதர் ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையில், சர்ச்கேட் நோக்கிச் செல்ல வேண்டிய மின்சார ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது இளைஞர் ஒருவர் திடீரென தற்கொலை முயற்சியாக ஓடும் ரயிலின் அடியில் பாய்ந்து படுத்துக் கொண்டதாக தகவலின்படி கூறப்படுகிறது.
சமயோசிதமாக செயல்பட்ட பெண் காவலர்
இதைக் கவனித்த பெண் காவலர் ஏ.ஏ. நார்வடே மற்றும் அவருடன் பணியில் இருந்த காவல்துறையினர் ஒரு நொடியும் தாமதிக்காமல் செயல்பட்டனர். ரயில் நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், இளைஞரின் கால்களைப் பிடித்து பாதுகாப்பாக வெளியே இழுத்து மீட்டனர். அவர்களின் வேகமான நடவடிக்கையால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
காவலருக்கு பாராட்டு
உயிர் காக்கும் இந்த துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏ.ஏ. நார்வடேவின் துணிச்சலையும், உடனடி முடிவெடுக்கும் திறனையும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பாராட்டி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Mumbai – Alert police personnel at Dadar railway station foiled a suicide attempt by a man who tried to end his life by lying under a moving local train. The dramatic incident occurred on Platform No. 1 just as a Churchgate–Borivali slow local train was departing. Police… pic.twitter.com/gvOri77fc4
— NextMinute News (@nextminutenews7) August 1, 2026
இதையும் படிங்க: லிப்ட்டில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.... நண்பர்களுடன் விளையாடும் போது நடந்த விபரீதம்! 12 வயது சிறுவன் பரிதாப பலி! அதிர்ச்சி வீடியோ!!!