அடுத்த அதிரடி.... தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு! தவெகவை நோக்கி வந்தவர்களுக்கு பதவிகளை வாரி வழங்கும் முதல்வர் விஜய்...!!!



vijay-appoints-vijayabaskar-district-organisers

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், இருவருக்கும் சொந்த மாவட்டங்களிலேயே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கரூர், புதுக்கோட்டைக்கு புதிய பொறுப்புகள்

அதன்படி, கரூர் மாவட்ட அமைப்பாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளராக சி. விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தங்களது சொந்த மாவட்டங்களில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து, நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் இருவரும் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்..! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக ரிப்போர்ட்..!!!

கள அனுபவத்தை களமிறக்கும் தவெக

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் பணியாற்றிய இருவருக்கும் நீண்டகால அரசியல் கள அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தை பயன்படுத்தி மாவட்ட அளவில் கட்சியை விரிவுபடுத்தும் பணிகளை வேகப்படுத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

தேர்தலை எதிர்நோக்கி கட்சி கட்டமைப்பு

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மூத்த அரசியல் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பாக, தவெக மாவட்ட அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை வலுப்படுத்துவதில் இருவரின் பங்களிப்பு கவனம் பெற்றுள்ளது. இதனால், அந்தந்த மாவட்டங்களில் கட்சிப் பணிகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக நிர்வாக ரீதியாக தனது கட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

 

இதையும் படிங்க: இது நடக்க வைக்கத்தான் இவ்வளவு நாடகமா? தவெக-வின் மூன்று கட்ட அரசியல் திரைக்கதையை அவிழ்த்த திமுக MP அப்துல்லா...!!!