ஆளுநர் மாளிகையை அதிரவைத்த தவெக பிரமுகர்.. ஆட்டோவில் மடக்கித்தள்ளி அனுப்பிய போலீஸ்..!



TVK Supporter Detained Outside Raj Bhavan Over Demand to Invite Vijay to Form Government

தவெக பிரமுகரை காவல்துறையினர் ஆட்டோவில் ஏற்றி அகற்றினர்.

அரசியல் நகர்வுகள்:

TVK Government: தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தல் 2026ல் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் 108 தொகுதிகளில் வெற்றி அடைந்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை நோக்கி அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க: JCD Prabhakar: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்.!

மறுதேர்தல்?

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்கு போதுமான இடங்கள் இல்லாததால், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் விஜயின் தலைமையில் ஆட்சி அமையுமா? அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்ன? குடியரசுத்தலைவர் ஆட்சி வருமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. மறுதேர்தல் பேச்சுகளும் எழத் தொடங்கியுள்ளன. 

TVK

போராடிய தவெக பிரமுகர் அகற்றம்:

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து தவெக பிரமுகர் ஒருவர் ராஜ்பவன் முன்னிலையில் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி அகற்றினர். இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தவெக தொண்டர் கைது செய்யப்பட்ட வீடியோ:

இதையும் படிங்க: விஜய் தளபதி ஜெயிப்பாரா? டெல்லியில் நடந்த சுவாரஷ்யம்.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த முக்கிய தகவல்.!