தவெக வில் போர்க்கொடி தூக்கிய 10 முக்கிய பிரமுகர்கள்..! அடுத்து கட்சியிலிருந்து விலகலா? அதிர்ச்சியில் CM விஜய்..!!!
தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால், சமீபத்தில் கட்சியில் இணைந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சுமார் 10 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பு பொறுப்புகளில் தங்களுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
கட்சியில் இணைந்தபோது மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகக் கூறப்படும் சிலர், தற்போதைய நிர்வாக நியமனங்களில் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சித் தலைமையிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த அரசியல் பயணத்தில் அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தவெகவிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சி
இந்த சூழ்நிலையால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், பிரச்சினை பெரிதாகாமல் தடுக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டு சமரசம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தவெக வட்டாரத்தில் பரபரப்பு
தேர்தல் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்க முயன்று வரும் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலேயே அமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்வது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.
கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க இந்த விவகாரத்தை விரைவாகத் தீர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நிர்வாக நியமனங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: BREAKING: திடீர் ட்விஸ்ட்! அதிமுகவில் இணைந்தனர்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!