BREAKING: திடீர் ட்விஸ்ட்! அதிமுகவில் இணைந்தனர்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!



eps-thangamani-meeting-aiadmk-internal-politics

அதிமுகவில் அணிகள் இணைப்பு மற்றும் உள்கட்சி பரபரப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட சில எம்.எல்.ஏ-க்கள் இபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருந்தது.

இபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ-க்கள்

அதிமுகவில் கடந்த சில நாட்களாக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. கட்சிக்குள் பல்வேறு தரப்பினரிடையே தொடர்ந்து ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், நேற்று சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ-க்கள் நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அடுத்தடுத்த சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களாக பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: அதிமுக தலைமையில் அதிர்ச்சி.... எஸ்.பி.வேலுமணி, சி. வி.சண்முகம் உட்பட6 MLA-க்கள் திடீர் மாயம்..? அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!

மாவட்டச் செயலாளர் பொறுப்பு குறித்து கோரிக்கை?

தகவலின்படி, அண்மையில் நடந்த அரசியல் நகர்வுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக அவர்கள் இபிஎஸிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின், கட்சியில் இருந்து தங்களிடம் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், கட்சியின் அடுத்த கட்ட அமைப்பு மாற்றங்கள் மற்றும் நிர்வாக பொறுப்புகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு தரப்பினரிடையே தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சந்திப்புகள் கட்சிக்குள் புதிய அரசியல் சமநிலையை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடுத்துள்ள இந்த நகர்வு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் திசையை தீர்மானிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!