முதல்வர் விஜய்யின் முதல் பட்ஜெட் கூட்டுத்தொடர்! மகளிர் உரிமைத்தொகை ரூ. 2500, தாலிக்கு தங்கம், 6 இலவச கேஸ் சிலிண்டர்.... பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்.!!!



tvk-government-first-budget-session-july-2026

 

தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தவெக அரசின் முதல் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை மாத முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கவர்னர் அர்லேக்கர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடர்

17-வது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு இது முதல் பட்ஜெட் கூட்டத்தொடராகும். ஆண்டின் முதல் கூட்டத்தொடரும் இதுவே என்பதால், அரசின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கவர்னர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: #சற்று முன் : மக்களே மகிழ்ச்சி செய்தி.... தமிழகத்தில் அனைவருக்கும் கடன் தள்ளுபடி... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

முழுமையான பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்திருந்தது. இதனால், தற்போது நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளதே 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஆகும்.

தேர்தல் அறிக்கையில் தவெக அறிவித்திருந்த பெண்களுக்கான உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்குவது, தாலிக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பது பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

ஆகஸ்ட் வரை நீளும் விவாதங்கள்

கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கலுக்கு பின் அவற்றின் மீதான விவாதங்கள் நடைபெறும். அதன்பின் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட உள்ளன. தகவலின்படி, இந்த நடைமுறைகள் ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரம் வரை தொடரக்கூடும் என கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களில் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை பொறுப்பு! கூட்டணி கட்சிகளுக்கு 8 இடங்கள்! அந்த முக்கிய இடம் யாருக்கு? கசிந்தது புதிய அமைச்சரவை லிஸ்ட்..!!!