அடுத்த 3 நாட்களில் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை பொறுப்பு! கூட்டணி கட்சிகளுக்கு 8 இடங்கள்! அந்த முக்கிய இடம் யாருக்கு? கசிந்தது புதிய அமைச்சரவை லிஸ்ட்..!!!
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய பங்கு வழங்கும் வகையில் இறுதிக்கட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 10-ஆம் தேதி முதலமைச்சருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே முதற்கட்டமாக பதவியேற்றிருந்த சூழலில், தற்போது காலியாக உள்ள அமைச்சரவை இடங்களை முழுமையாக நிரப்ப தலைமைச் செயலக அதிகாரிகள் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: BREAKING : அப்படி இப்படின்னு ஆதரவு கட்சிகளை திரட்டி... ஆளுநரை சந்தித்த விஜய்! அரங்கேரிய அரசியல் களத்தின் "க்ளைமாக்ஸ்" காட்சி...!!!
கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய பங்கு
தகவலின்படி, புதிய அமைச்சரவையில் ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 26 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், சட்டசபையில் ஆதரவு அளித்து வரும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 5 அமைச்சரவை இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விசிக கட்சிக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முக்கிய இடம் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
இலாக்கா ஒதுக்கீடுகள் இறுதியாக முடிவடைந்ததும், கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற உடனே, ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்களுக்கு விவாதம் நடைபெற உள்ளது.
பட்ஜெட்டுக்கு அதிக எதிர்பார்ப்பு
இந்த விவாதங்களுக்கு இறுதியாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பதிலுரை வழங்க உள்ளார். அதன் பின்னர், 2026-27 நிதியாண்டிற்கான புதிய Budget 2026 தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை, இந்த முறை ஒரே கூட்டு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுடன் கூட்டத்தொடர் 40 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்புள்ளதால், புதிய அமைச்சரவையின் செயல்பாடு குறித்து அரசியல் களத்தில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.