பேருந்து பயணத்தில் 2 இளம்பெண்கள் விலக விலக இடுப்பில் கை வைத்து... அநாகரிகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ..! கொந்தளிப்பை உண்டாக்கிய வீடியோ..!!!
தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரு இளம்பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொட்டதாக வீடியோ காட்சிகள் மூலம் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பேருந்தில் நடந்ததாக கூறப்படும் அநாகரிக செயல்
வைரலாகி வரும் வீடியோவில், பேருந்தில் நின்றுகொண்டிருக்கும் இரண்டு பெண்களிடம் மால்ரெட்டி ரங்கா ரெட்டி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர்களின் அனுமதியின்றி உடலைத் தொட்டும், இடுப்பில் கை வைத்தும் அவர் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பெண்கள் அவரிடம் இருந்து விலகிச் செல்ல முயற்சிப்பது போலவும், அதன்பிறகும் அவர் தொடர்ந்து அருகில் சென்று பேசுவது போலவும் காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. எனினும், வீடியோவின் முழுமையான பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
சமூக வலைதளங்களில் நடவடிக்கை கோரிக்கை
வீடியோ பரவியதைத் தொடர்ந்து பலரும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூத்த பெண் பத்திரிகையாளர் ரேவதி உள்ளிட்டோர், பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கண்டித்துள்ளனர்.
யாராக இருந்தாலும் பெண்களின் தனிப்பட்ட எல்லையை மதிக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலவரம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
This sorry excuse of a human being is Congress MLA Malreddy Ranga Reddy, from Ibrahimpatnam, Hyderabad.
— Revathi (@revathitweets) October 6, 2026
Dear Girls,
Don’t hesitate to slap the hell out of disgusting lechers like these.
No one.
Absolutely no one can and should touch you like this without your permission.… pic.twitter.com/XFeOXM19oQ
இதையும் படிங்க: ஸ்டாலின் தோல்விக்கு காரணமே இதுதான்...! திருமாவளவன் வெளியிட்ட பகீர் தகவல்..! அரசியலில் அதிகரிக்கும் பரபரப்பு...!!!