5 தொகுதி இடைத்தேர்தலில் சிக்கலில் சிக்கி தவிக்கும் அதிமுக! CM விஜய் பிளான் போட்டு காயை நகர்த்தியதால் திணறும் எடப்பாடி...!!!



tamil-nadu-five-constituency-bypolls

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்குள் வாக்குப்பதிவு நடைபெறலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றன.

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யும் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க: 1 இல்ல 2 இல்ல மொத்தம் 70 எம்.எல்.ஏக்கள் எடுத்த அதிர்ச்சி முடியு! த.வெ.க கூடாரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு... திணறும் முதல்வர் விஜய்.!!!

இதனால் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின. இதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தவெக, திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்

ஆளும் தவெக சார்பில் கரூர் தொகுதிக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலைக்கு சி. விஜயபாஸ்கர், பெருந்துறைக்கு ஜெயக்குமார், அம்பாசமுத்திரத்துக்கு இசக்கி சுப்பையா ஆகியோர் வேட்பாளர்களாகக் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில், மக்களிடம் அறிமுகமான முக்கிய நபரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

திமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடிந்துவிட்டதாகவும், வேட்பாளர் அறிவிப்பு மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிட உள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்?

மறுபுறம், அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல்கள் சவாலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்குடன் இருந்த முன்னாள் நிர்வாகிகள் தற்போது தவெக சார்பில் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுவது அதிமுகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, தேர்தல் செலவுகள், தலைமை தரப்பிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து கட்சி நிர்வாகிகளிடையே தயக்கம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் போட்டியிட முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, தனக்கு நெருக்கமானவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்கள், தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. ஆளும் தவெக தனது செல்வாக்கை நிரூபிக்கவும், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் தற்போதைய பலத்தை அளவிடவும் இந்தத் தேர்தல் களமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

இதையும் படிங்க: இடைத்தேர்தல் நேரத்தில் சிக்கலில் சிக்கிய தவெக! ரூ.35.79 கோடி சொத்து வழக்கில் சி. விஜயபாஸ்கரிடம் ED கிடுக்கிப்பிடி விசாரணை..! நாளை மனைவி விசாரணைக்கு ஆஜர்..!!!