1 இல்ல 2 இல்ல மொத்தம் 70 எம்.எல்.ஏக்கள் எடுத்த அதிர்ச்சி முடியு! த.வெ.க கூடாரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு... திணறும் முதல்வர் விஜய்.!!!
தமிழக வெற்றிக் கழகத்தில் 70 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், சில எம்.எல்.ஏக்கள் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
குதிரை பேரத்தில் திமுக ஈடுபடாது
செய்தியாளர்களைச் சந்தித்த ரகுபதி, குதிரை பேரம் செய்யும் அளவுக்கு திமுகவில் யாரிடமும் பணபலம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி திமுகவுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இத எப்படி எடுத்துக்குறது.. முன்னாள் எம்பி மைத்ரேயனின் எக்ஸ் தள பதிவால் அதிர்ச்சியில் ஸ்டாலின்..!
தனி அணியாகச் செயல்பட தவெக எம்.எல்.ஏக்கள் முடிவு?
மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்து தவெக எம்.எல்.ஏக்கள் சிலர் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருப்பதாக ரகுபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே முதல்வர் விஜய், கட்சி எம்.எல்.ஏக்களை அடிக்கடி அழைத்துப் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தவெகவில் 70 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக ரகுபதி கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.