இத எப்படி எடுத்துக்குறது.. முன்னாள் எம்பி மைத்ரேயனின் எக்ஸ் தள பதிவால் அதிர்ச்சியில் ஸ்டாலின்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் எம்பி மைத்ரேயன் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அக்டோபர் 22-ம் தேதி அமித்ஷா பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், மைத்ரேயனின் பதிவு பேசுபொருளாகியுள்ளது. அவர் ஏற்கனவே கட்சியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் சூழலில், இந்த வாழ்த்து அரசியல் விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமித்ஷாவைப் பாராட்டி மைத்ரேயன் பதிவு
எக்ஸ் தளத்தில் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த மைத்ரேயன், “தேசத்தை முதன்மையாகக் கருதும் உங்களது தொலைநோக்குப் பார்வை அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ள இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
திமுக வட்டாரத்தில் அதிருப்தி எனத் தகவல்
மைத்ரேயனின் இந்த வாழ்த்து திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பாக கட்சித் தரப்பில் அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் வெளியாகவில்லை.
கட்சியிலிருந்து விலகுவாரா?
மைத்ரேயன் கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், அமித்ஷாவுக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும், கட்சியிலிருந்து விலகுவது குறித்தோ, தனது அரசியல் நிலைப்பாடு குறித்தோ மைத்ரேயன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: வேறுபட்டவர்கள் அல்ல... இவுங்க ரெண்டு பேரும் ஒன்னுதான்..! செங்கோட்டையன் போட்டு உடைத்த ரகசியம்... அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்.!!!