காதலிக்கும் போது அது தெரியலையா..? காதலன் சொன்ன ஒற்றை வார்த்தை... அடுத்த நொடியே 9-வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண் உயிரிழப்பு..! சென்னையில் நடந்த அதிர்ச்சி..!!!



sholinganallur-woman-suicide-boyfriend-arrested

சென்னை சோழிங்கநல்லூரில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 24 வயது இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். திருமணம் செய்துகொள்ள காதலன் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார், காதலன் வருண் பாலாஜியைக் கைது செய்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்த இருவரும்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முத்துக்குமாரின் மகன் வருண் பாலாஜி (33), சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் வசித்து வந்தார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான பர்வீன் (24) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: பேருந்து நிலையத்திலே இப்படியா..? மக்கள் கண்முன்னே அரசு நடத்துநரை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பல்! குலை நடுங்கவைக்கும் சம்பவம்...!!!

கடந்த சில நாட்களாக வருண் பாலாஜி தன்னுடன் பேசுவதைக் குறைத்ததுடன், செல்போன் அழைப்புகளையும் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பர்வீன், நேற்று இரவு அவரை நேரில் சந்திப்பதற்காக சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

திருமணம் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம்

தனது வீட்டில் திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், எனவே உடனடியாகத் தன்னைப் பெண் கேட்டு வருமாறும் பர்வீன் வலியுறுத்தியுள்ளார். அதற்கு, மத வேறுபாடு காரணமாகத் தனது குடும்பத்தினர் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், திருமணம் செய்துகொள்வது கடினம் என்றும் வருண் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பர்வீன் வீட்டிலிருந்த நாற்காலியை வெளியே கொண்டு வந்து அதன் மீது ஏறி 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து, இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காதலன் கைது செய்து போலீசார் விசாரணை

தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார், பர்வீனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பர்வீனைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி வருண் பாலாஜியைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இதையும் படிங்க: என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா..! அதிகாலையில் வீடு புகுந்து கள்ளகாதலனின் வெறிச்செயல்..! அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கண்ட அதிர்ச்சி..... பகீர் சம்பவம்..!!!