தமிழக பாஜகவில் அரங்கேறும் அடுத்த காமெடி!!

sv sekar ready to become tamilnadu bjp leader


sv sekar ready to become tamilnadu bjp leader

தமிழக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது நீடித்து வருகிறார். அவர் எப்போது எதை பற்றி கருது கூறினாலும், சமூக வலைத்தளங்களில் மிகுந்த விமர்சனத்துக்கு ஆளாகி விடுவார். நெட்டிசன்கள் அவரை வைத்து பல்வேறு காமெடிகளை அரங்கேற்றி வருகின்றனர். 

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வழிபாட்டில் கலந்து கொண்ட எஸ்.வி.சேகர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, மாநில பாஜக செயற்குழு தன்னை எதற்கும் அழைப்பதில்லை என்று கூறினார். 

tamilnadu bjp leader

தமிழக பாஜக தலைமையை ஏற்க வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பாஜக தலைமை ஏற்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை ஏற்பேன் என்றும், தற்போது என்ன வாக்கு வங்கி பாஜகவுக்கு உள்ளதோ அதைவிட அதிகமாகவே தம்மால் வாங்கு வங்கியை என்னால் வாங்கி காட்ட முடியும்" என்று நம்பிக்கையுடன் கூறினார். 

இதனை ஆதரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் தொண்டனும் தலைவர் ஆகலாம் என்பதை புரிந்துகொண்ட  எஸ்.வி சேகருக்கு வாழ்த்துக்கள் எனக்கூறினார்.

தமிழகத்தில் நோட்டாவிற்கு விழும் வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பாஜக பெற்று வருகிறது. மருத்துவரான தமிழிசையே இங்கு காமெடியாக தான் சித்தரிக்கப்படுகிறார். இதில் காமெடியனாக சினிமாவில் நடித்துள்ள எஸ்.வி சேகர் தலைவரானால் தமிழக பாஜக நிலைமை என்னவாகும்.