
sasikala poster in pudukottai
கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். தேர்தலுக்கு பின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
இந்தநிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக, நிரந்தர முதல்வராக ஓ பன்னீர்செல்வம் தான் வருவார் என்று தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் போஸ்டர் மூலம் பதிவு செய்ததால் உட்கட்சியில் சர்ச்சைகள் கிளம்பியது.
இந்தநிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையிலிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வருவார். அவர் பின்னால் ஆதரவாளர்கள பிரம்மாண்டமான அளவில் திரளுவார்கள், என அ.தி.மு.க மற்றும் டி.டி.வி.யின் அ.ம.மு.க.விலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும், தியாகத் தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு, என்று சசிகலா, டி.டி.வி. படத்துடன் போஸ்டர்கள் தீவிரமாக ஒட்டப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement