அரசியல் தமிழகம்

"பணத்த கட்டிட்டு எடத்த காலி பண்ணு" 18 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் அதிரடி பஞ்ச்

Summary:

sabanayagar ordered to leave the mla hostel for 18 mlas

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தினகரன் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்களை  சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார் .18 சட்டமன்ற உறுப்பினர்களும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அரசு விடுதியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக வெளியேற வேண்டுமென சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள்

இதனைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் அறைகளுக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

அதில், 18 சட்டமன்ற உறுப்பினா்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 18 பேரும் அரசு விடுதியை காலி செய்ய வேண்டும் என்றும் விடுதியில் நிலுவைத் தொகை இருக்கும் பட்சத்தில் அவற்றை செலுத்திவிட்டு விடுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement