BREAKING: அடுத்த பிடிவாரண்ட்.... செப்டம்பர் 2-க்குள் பொன்முடியைக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சைவ, வைணவ சமயம் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறைக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
செப்டம்பர் 2-க்குள் ஆஜர்படுத்த உத்தரவு
நீதிமன்ற உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்..! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக ரிப்போர்ட்..!!!
பிடிவாரண்டால் அரசியல் பரபரப்பு
நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தரப்பில் இந்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.
சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
தகவலின்படி, நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைமை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக- விழும் அதிரடி மாற்றம்! அறிவாலயத்தில் அரங்கேறும் அடுத்தகட்ட அரசியல்.... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!!