அதிமுக கூட்டணி குறித்து அறிவித்த எடப்பாடி பழனிசாமி  .?! 

அதிமுக கூட்டணி குறித்து அறிவித்த எடப்பாடி பழனிசாமி  .?! 



Palanisamy about ADMK Meeting

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த செயற்கூட்டத்தில்,  ஆகஸ்ட் 20 தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அதன்பின்னர் பேசியவர், எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த கட்சி தற்போது பெரும் ஆலமரம் போல் விரிந்து வளர்ந்துள்ளது. வெறும் 75 நாளில் இதுவரை 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இது மிக பெரிய வரலாற்று சாதனை எனவும், தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் பேசியுள்ளார். 

மேலும் பேசிய அவர், அதிமுக உடையவுமில்லை, சிதறவுமில்லை கட்டுக்கோப்பாக இருக்கிறது. அதிமுகவில் இனி வெற்றிடம் என்பதற்கே இடமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும் என்பதை தெரிவித்துள்ளார்.

அதிமுக தான் அனைவருக்குமான கட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என்றும் பெருமையாக பேசியுள்ளார். சில இடங்களில் மாவட்ட செயலாளர் பதவியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களது தனிப்பட்ட உட்கட்சி பிரச்சனை. கட்சியை மேலும் பலப்படுத்தியுள்ளோம். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதில் தெரிவித்துள்ளார்.