தொடங்கியது தமிழக 2019 -2020 பட்ஜெட்! அதிரடியான சலுகைகளை அறிவித்தார் துணை முதல்வர்.!

தொடங்கியது தமிழக 2019 -2020 பட்ஜெட்! அதிரடியான சலுகைகளை அறிவித்தார் துணை முதல்வர்.!


ops-announce-budjet-of-tamilnadu-2019--2020

2019- 2020  ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில்  நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து  பட்ஜெட் உரையை ஓ பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. 

அதன் முக்கிய அம்சங்களாக அவர் தெரிவித்திருப்பது, மொத்தமாக 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.அதில்  சென்னை, கோவை, மதுரைக்கு முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம்
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்