திடீர் ட்விஸ்ட்.... ஒன்று சேர்ந்த இரு துருவங்களான திமுக - அதிமுக..! இரவோடு இரவாக முதல்வர் விஜய்க்கு அதிர்ச்சி...!!!
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. நீண்டகாலமாக அரசியல் எதிரிகளாக இருந்து வந்த திமுக மற்றும் அதிமுக, தற்போது ஒரே விவகாரத்தில் இணைந்து அரசை விமர்சிப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு புதிய சவால் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சேனல்கள் நீக்கம் கிளப்பிய சர்ச்சை
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து மூன்று முக்கிய செய்திச் சேனல்கள் திடீரென நீக்கப்பட்டதே தற்போதைய அரசியல் பரபரப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த நடவடிக்கை ஊடகங்களின் செயல்பாட்டு சுதந்திரத்தை பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையும் படிங்க: அதிரடி அரசியல் திருப்பம்! விஜய்க்கு எடப்பாடி அனுப்பிய தூது.... ஆராந்து அரசியலில் காய் நகர்த்தும் விஜய்! தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்...!!!
திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஊடகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீண்டும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
இதற்கு முன்பும் 'ரதன் பண்டிட்' நியமன விவகாரத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அந்த அழுத்தத்தின் காரணமாக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து பின்வாங்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
தற்போது ஊடகச் சுதந்திரம் தொடர்பான விவகாரத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு என்ன விளக்கம் அளிக்கிறது என்பதும் அரசியல் அரங்கில் முக்கிய கவனப்பொருளாக மாறியுள்ளது.