அண்ணாமலையின் முடிவு.. 'ஆசியும் கிடையாது, ஒன்னும் கிடையாது' காரசாரமாக மனம்திறந்த நயினார் நாகேந்திரன்.!



Nainar Nagendran Slams Annamalai: ‘No Blessings, No Support’ After BJP Exit

பாஜக தேசம் என்ற சித்தாந்தத்தில் இருக்கிறது. பாஜகவில் இருக்கும் நபர்களை மூளைச்சலவை செய்யும் வேலையே அண்ணாமலை செய்யக்கூடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மூளைச்சலவை செய்கிறார்:

Nainar Nagendran Latest Speech Today: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, அதற்கான ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர், We Leaders என்ற இயக்கத்தை தொடங்கியிருப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். இந்த இயக்கத்தில் பாஜகவின் ஒன்றிரண்டு நிர்வாகிகள், அடிமட்ட பொறுப்பாளர்கள் இணைந்துள்ளார்கள். இவர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் இணைத்துள்ளார். 

இதையும் படிங்க: "மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேனா"...? நயினார் நாகேந்திரன் பதில்.!!

TN politics

அண்ணாமலைக்கு ஆசி கிடையாது:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியுடன் இயக்கத்தை தொடங்கி இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி, அமித் ஷா உட்பட எந்த ஒருவரின் ஆசியும் அண்ணாமலைக்கு இல்லை. பாஜக தேசம், நாடு என்ற சித்தாந்தந்ததின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. பாஜகவை பொறுத்தவரையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் பாஜகவில் இருந்து வெளியே சென்றாலும் மீண்டும் அவர்கள் இங்கு வந்துவிடுவார்கள்.

TN politics

பின்னடைவு இல்லை:

பாஜக தொண்டர்கள் யாரையும் நம்பி செல்ல வேண்டாம். அதற்கான அவசியமும் இல்லை. யாரின் ஆசிர்வாதமும் எந்த இயக்கத்துக்கும் கிடையாது. அங்கு இருப்பவர்கள் பாஜகவின் தொண்டர்களாக இருக்க முடியாது. பாஜகவில் இருப்பவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம். பிற அமைப்புகளில் இருப்பவர்கள் இங்கு இருக்க முடியாது. அண்ணாமலையின் செயல்பட்டால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. மோடியின் வழியிலேயே பாஜக இயங்குகிறது. ராஜினாமா கடிதம் கொடுத்த பின் ஆசீர்வாதம் எப்படி இருக்கும்?" என பேசினார்.

TN politics

தமிழக அரசியலில், பாஜகவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடத்தை பெற்ற அண்ணாமலை தனி இயக்கத்தை தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். ஏற்கனவே 2026 தேர்தல் முடிவுக்குப்பின் அதிமுக சிதறி வரும் நிலையில், அண்ணாமலையின் முடிவும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் மாறிய அரசியல் கணக்கு! அண்ணாமலைக்காக பாஜகவை விட்டு மொத்தமாக விலகிய முக்கிய நிர்வாகிகள்.... அடுத்து நடக்கப்போகும் அதிரடி அரசியல் மாற்றம்...!!!