"மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேனா"...? நயினார் நாகேந்திரன் பதில்.!!



no-need-to-resign-my-post-nainar-nagendran-interview

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முடித்துக் கொண்ட அதிமுக இந்த முறை மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. அதிமுக, பாஜகவை புறக்கணித்ததற்கு அண்ணாமலை தான் காரணம் எனக் கருதிய பாஜக தலைமை அந்தக் கட்சியின் தமிழ் மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வருகிறது. மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நீடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினர். மேலும் டிடிவி தினகரன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனால் கூட்டணியை சரியாக வழி நடத்த முடியவில்லை என தெரிவித்திருந்தார். இதனால் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனவும் பல செய்திகள் வெளியானது.

TN politics

இந்த சூழலில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான எந்த அவசியமும் இப்போது இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்திற்கு வருகை புரிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து சென்றதையும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: "திமுக கனவு பலிக்காது; இனிமே நாங்க தான்..." நெல்லையில் அமித்ஷா சூளுரை.!!

அதிமுக கூட்டணி பலவீனமாக இருப்பதாக திமுக கூறுவதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுக இன்னும் அதே பலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பேரணிக்கு தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பொருந்தா கூட்டணி..." பாஜக ஆட்களை ஒதுக்கிய இ.பி.எஸ்.!! மீண்டும் கூட்டணியில் சிக்கல்.?