AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"பொருந்தா கூட்டணி..." பாஜக ஆட்களை ஒதுக்கிய இ.பி.எஸ்.!! மீண்டும் கூட்டணியில் சிக்கல்.?
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணியை அமைத்தார். இந்தக் கூட்டணிக்கு அதிமுக கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தி இருந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல் பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முடித்துக் கொண்டதாக அதிமுக அறிவித்தது. எனினும் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை அமைத்தது அதிமுக. மேலும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை தடையாக இருந்ததால் அவரது மாநிலத் தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எனவும் அறிவித்தார்.

எனினும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி அதிமுக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தற்போதைய கூட்டங்களில் பாஜக கட்சியினரிடமிருந்து சற்று விலகி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது அந்தக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கையுடன் பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் குறைகளை கூறி அதிமுக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: "கொஞ்சம் கீழ இருக்கீங்களா.." கட்டளையிட்ட இ.பி.எஸ்.!! கடுப்பான ஆர்.பி உதயகுமார்.!! அதிமுகவில் கோஷ்டி மோதல்.?
இந்நிலையில் நேற்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டத்திற்கு வந்து அவர்கள் சிறிது நேரத்திலேயே அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிடையே இருக்கும் பிளவை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; ஆட்சில பங்கு கிடையாது.." இபிஎஸ் கருத்தால் புதிய சர்ச்சை.!!