"டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; ஆட்சில பங்கு கிடையாது.." இபிஎஸ் கருத்தால் புதிய சர்ச்சை.!!



no-power-sharing-in-rule-eps-new-interview-sparks-debat

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி குறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பாஜக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அதிமுக - பாஜக கூட்டணி

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியுடனான உறவை அதிமுக துண்டித்துக் கொண்டது. இந்நிலையில் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தமிழகத்தில் மலர்ந்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தி இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார். மேலும் இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக நிர்வாகியான நயினார் நாகேந்திரன் பாஜகவின் புதிய தமிழ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

tamilnadu

அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என மக்களிடம் உறுதியாக தெரிவித்த பின்னர் அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக தலைமையின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மூத்த நிர்வாகிகள் பதவி விலகி வருகின்றனர். மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக வெளியிடப்பட்ட போஸ்டரிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அண்ணாமலை பாஜகவின் சொத்து; அரசியல் கூட்டணி நாகரீகமாக இருக்க வேண்டும்..." திமுக கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி.!!

ஆட்சியில் பங்கு கிடையாது

இந்நிலையில் சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான் என தெரிவித்திருக்கிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லிக்கு மோடி. தமிழ்நாட்டிற்கு நான் தான் என அமித் ஷா தனக்கு தெளிவுபடுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். அவரது இந்த கருத்து கூட்டணி கட்சிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க: "எந்த வேசத்தில் வந்தாலும் பாஜகவிற்கு தோல்விதான்..." காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.!!