Video : குஷ்பூவின் மகள் திருமணத்தில் நடிகை திரிஷா! வேறு யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா..?
ஆதாரம் இருந்தால் நிரூப்பிங்க... சவாலுக்கு சவல்! நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்... நீங்க அதுக்கு ரெடியா? அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!!!
மருத்துவக் கல்லூரி தொடங்க விண்ணப்பித்ததாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், இல்லையெனில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா எனவும் அவர் நேரடியாக சவால் விடுத்துள்ளார்.
ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும்
செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தனக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் நன்றாகத் தெரியும் என்று கூறினார். ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பலமுறை சிக்கலில் சிக்கியவர் என்றும் விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கும் கண்டனம்
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளையும், மேடையில் அவர் செய்த சைகைகளையும் நயினார் நாகேந்திரன் கண்டித்தார். குறிப்பாக, முதலமைச்சர் கூறிய குட்டிக் கதையும் அதனுடன் இணைந்த சைகையும் அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல என்று அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையன் பேச்சுக்கு பதிலடி
முன்னதாக, கே.ஏ.செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சியின்போது மருத்துவக் கல்லூரி தொடங்க விண்ணப்பித்தவர் என்றும், தமிழக வெற்றிக் கழகம் பாஜகவிடம் உதவி கேட்டதாக கூறுவது நகைப்புக்குரியது என்றும் விமர்சித்திருந்தார். இந்தக் கருத்துகளுக்கே தற்போது நயினார் நாகேந்திரன் கடுமையான பதிலடி அளித்திருப்பதால், இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் வார்த்தைப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: அதுல இருந்து காவடி தூக்கும் சீமானே.... உதயநிதி இத செஞ்சா மறுநாளே நான் எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன்! சவால் விட்ட எம்பி மாணிக்கம் தாகூர்..!!!