பிஜேபி-யுடன் சேர்ந்து களமிறங்க போகிறாரா ஜில்லா பட நாயகன்!!

பிஜேபி-யுடன் சேர்ந்து களமிறங்க போகிறாரா ஜில்லா பட நாயகன்!!



mohan lal ready to join in bjp

மலையாள திரைத்துறையின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்  மோகன்லால். இவர் 5 முறை தேசிய விருதும், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதும் பெற்றுள்ளார். 

இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 

இவர் தமிழில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்த ஜில்லா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

mohanlal

நடிகர் மோகன்லால் கேரளாவில் தனது பெற்றோர் பெயரில் ‘விஸ்வசாந்தி பவுண்டேஷன்’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த மோகன்லால், வயநாடில் நடக்க இருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு பிரதமர் சிறப்பு அழைப்பாளராக வரவேண்டுமென அழைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "மிகச் சிறந்த மலையாள நடிகரான மோகன்லாலை சந்ததித்து பேசினேன். மனித நேயத்துடன் அவர் ஆற்றி வரும் சமூக பணிகள் பாராட்டுக்குரியவை, என்னையே வியக்க வைத்துள்ளன அவரின் சமூக பணி" என புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரதமர் மோடி.

இதையடுத்து பாஜக சார்பாக வரும் 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடளுமன்ற தேர்தலில், மோகன்லால் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நடிகர் மோகன்லால் பல்வேறு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.