#Breaking: பிரதமர் மோடியின் தாயார் Heeraben Modi மறைவு; தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

#Breaking: பிரதமர் மோடியின் தாயார் Heeraben Modi மறைவு; தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!



mk-stalin-mourning-prime-minister-modi-mother-passes-aw

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், குஜராத் அகமதாபாத் மருத்துவமனையில் தனது வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. தாயாரின் மறைவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து உருக்கமான தகவலையும் தெரிவித்து இருந்தார். 

பிரதமரின் தாயார் மறைவுக்கு பல மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் என அடுத்தடுத்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாஜக தொண்டர்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியின் தாயார் மறைவு தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் ட்விட்டர் பதிவில், "அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். 

MK Stalin

தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.