என்ன இப்படி சொல்லிட்டாரே.... தவெகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் அமைச்சர்! பரபரப்பு வீடியோ..!!!
மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது அவர் நடனமாடிய காட்சியும், பின்னர் பேச்சில் நிகழ்ந்த வாய் தவறும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
4 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற மாரத்தான்
மேலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: பாஜக விவசாயி மாநாட்டில் வள்ளி கும்மி நடனமாடி குத்தாட்டம் போட்ட குஷ்பூ! கலக்கல் வீடியோ வைரல்!
விஜய் பாடலுக்கு அமைச்சரின் உற்சாக நடனம்
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி கைப்படாத சிடி' பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்களின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அழைத்ததால் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டதாகவும், அதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.
பேச்சில் நிகழ்ந்த வாய் தவறு வைரல்
இதற்கிடையில் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் விஸ்வநாதன், தற்போது தமிழகத்தில் முதல்வர் தளபதி ஸ்டாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது என வாய் தவறி குறிப்பிட்டார். இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த காட்சி தமிழக வெற்றிக்கழகத்தினரிடையே அதிருப்தியையும், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | “முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ஆட்சி..” -மேடையில் இருந்த தவெகவினருக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்#SunNews | #Madurai | | #TVK | #Congress pic.twitter.com/Av3K6WMzEI
— Sun News (@sunnewstamil) June 21, 2026
இதையும் படிங்க: எம்எல்ஏ பல்லவியின் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தியப்படி கொஞ்சிய ஆதவ் அர்ஜுனா! இருக்கை வரை வந்து பத்திரமாக பல்லவியிடம் கொடுத்த வீடியோ...!!!