BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அதிர்ச்சி! கூட்டத்தில் வெறும் 10 நிமிடத்தில் பர்ஸ், பணம்னு அடுத்தடுத்து நடக்கும் திருட்டு! புகார் அளித்தும் யாருமே கண்டுக்கல! தவெக மாநாட்டில் பகீர் கிளப்பிய பெண்ணின் அதிர்ச்சி வீடியோ...
மதுரையில் நடைபெரும் தவெக மாநாடு அரசியல் சூழலை மட்டுமல்லாமல், அதிர்ச்சியூட்டும் சம்பவங்களாலும் பேசப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், எதிர்பாராத திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் பரபரப்பான சூழல்
மாநாட்டிற்கு வந்த ஒரு பெண், தண்ணீர் வாங்குவதற்காக கூட்டத்தில் நின்றபோது, தன்னுடைய மணி பர்ஸ் திருடப்பட்டதாக தெரிவித்தார். அதில் பணமும், ஏடிஎம் கார்டும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொருவரின் பணமும், இன்னொருவரின் ஸ்மார்ட்போனும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியினரிடம் குற்றச்சாட்டு
திருட்டுச் சம்பவங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் புகார் கூறியபோது, தண்ணீர் விநியோகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அக்கறை காட்டவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார். மேலும், காவல்துறையிடம் புகார் செய்ய முயன்றபோது, மாநாட்டு வளாகத்துக்கு போலீசார் வர மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வைரல்
பெண் அளித்த பேட்டி சமூக ஊடக தளமான X-இல் வெளியானதும் அது வேகமாக வைரலானது. இதனால், மாநாட்டு நிர்வாகிகள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அரசியல் மாநாடுகள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இத்தகைய திருட்டு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு பாதுகாப்பு வலுவாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகியுள்ளது.
இந்த தடவ திமுக காரன் அவன் பாரம்பரிய பரம்பர புத்தியோட இறங்கிருக்கான் மக்களே.. பாத்து உஷாரா இருங்க 😳😳..#TVKMaduraiMaanadu pic.twitter.com/srbfkacue6
— உயிரே தளபதி 🥹🖤🛐🙏 (@DhaD35487426) August 21, 2025
இதையும் படிங்க: மக்களோடு மக்களாக பேருந்து ஏறுவது போல வந்த வாலிபர்! அடுத்த சில நொடிகளில் அவர் செய்த வேலையை பாருங்க! வெளியான பகீர் வீடியோ!