செய்தது எல்லாம் தப்புதான்! என்னை மன்னிச்சுடுடி... ஆசை வார்த்தை கூறி கூப்பிட்ட கணவன்! ரீல்ஸ் போட்ட அடுத்த நிமிடம் நடந்த கொடூரம்.... பகீர் சம்பவம்.!!!
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் கணவருடன் Instagram Reels பதிவு செய்த சில நிமிடங்களிலேயே 42 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் கணவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் சேர்ந்து வாழ அழைப்பு
பாசில்லா மாவட்டத்தின் ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் (42), கணவர் குர்மீத் சிங்கிடம் இருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கூறி குர்மீத் அவரை சந்திக்க அழைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போது இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பரின் உடலை துணியால் சுற்றி தெருவில் வீசிவிட்டு தப்பிய வாலிபர்! சிசிடிவியை பார்த்து உறைந்துபோன போலீசார்..!!!
சில நிமிடங்களில் நடந்த கொலை
தகவலின்படி, ரீல்ஸ் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆள்நடமாட்டம் குறைவான புதர்கள் நிறைந்த பகுதிக்கு சரோஜை அழைத்துச் சென்ற குர்மீத், கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடலை மண்ணில் புதைத்து தடயங்களை மறைக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் நடவடிக்கை
அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு ஓடி வந்ததைத் தொடர்ந்து, குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் சரோஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த குர்மீத் சிங்கை கைது செய்த போலீசார், வழக்கின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
In a chilling case reported from Jandwala Mira Sangla village in Fazilka district, a man allegedly called his divorced wife for a meeting on the pretext of reconciliation, murdered her with a sharp-edged weapon and buried her body in a field to destroy evidence.
— Hate Detector 🔍 (@HateDetectors) August 1, 2026
The victim,… pic.twitter.com/l8c8Q168lq