#Election2024 | பாஜக பிரச்சாரத்திலிருந்து விலகிய குஷ்பூ.!! வெளியான அதிர்ச்சி காரணம்.!! தலைமைக்கு எழுதிய உருக்கமான கடிதம்.!!



kushboo-quits-bjp-election-campaign-sitting-health-reas

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது ஆதரவாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் பாராளுமன்ற தொகுதிகளுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையுமான குஷ்பூ 2024 ஆம் வருட தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருக்கிறார். இவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஷ்பூ பிரச்சாரத்தில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக கடிதத்தின் மூலம் இன்று அறிவித்துள்ளார் .

politicsபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பூ அந்தக் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தனது உடல் நலக்குறைவு காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் தெரிவித்த குஷ்பூ தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள குஷ்பூ பிரதமர் மோடியை 3-வது முறை பிரதமராக பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும்  உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.