அரசியல் தமிழகம்

குக்கர் டிடிவிக்கு இல்லையா அப்போ எங்களுக்கு குடுங்க; சின்னத்திற்கு நிலவும் கடும் போட்டி.!

Summary:

kukker sinnam - ammk - ttv dinakaran - suyatchai canditates

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

மேலும் அணைத்து கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் அமமுக-விற்கு  குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது.  அமமுக ஒரு கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்பதால் அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது. 

இந்நிலையில் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்கள், ‘குக்கர்’ சின்னம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தங்கள் வேட்புமனுக்களிலும் குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் அமமுக வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களில் ‘குக்கர்’ சின்னம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement