ஆபாச மெசேஜ் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்க ஏன் இவ்வளவு காலதாமதம்..? இடைப்பட்ட நேரத்தை ஆராய்வது அவசியம்! தவெக எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாகக் களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்..!!!
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகாரில் சிக்கியுள்ள தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளிக்க தாமதமானது ஏன்?
செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்க ஏன் இவ்வளவு காலதாமதம் செய்தார் என்பதை முதலில் விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கும் புகார் அளிக்கப்பட்ட நேரத்திற்கும் இடையே ஏற்பட்ட தாமதத்தின் பின்னணி குறித்து ஆராய வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 3 மணி நேர விசாரணை..! கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. வழக்கில் வெளியான பகீர் தகவல்..!!!
எதற்கெடுத்தாலும் கைது செய்ய வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை
எல்லா விவகாரங்களிலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது இந்தக் கருத்து அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் விவாதம்
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், கைது நடவடிக்கைக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.