விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! .. சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் – ஜவாஹிருல்லா அதிரடி!



Jawahirulla condemned cm Vijay

தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையேயான அரசியல் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதன் ஆட்சிக் கால செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லா, முதலமைச்சரின் பேச்சு எதிர்க்கட்சியை விமர்சிக்கும் வழக்கமான அரசியல் வரம்பை மீறியதாக உள்ளது எனக் கூறியுள்ளார். 

முன்னதாக, மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரத்திலும் ஜவாஹிருல்லா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஒரு முன்னாள் முதலமைச்சர் மற்றும் முக்கிய அரசியல் தலைவரின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடாது என்றும், பாதுகாப்பு குறைப்பு தொடர்பான முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். 

இதையும் படிங்க: விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! புதிய பெயர்... புதிய அரசியல் கணக்கு! 

இந்த நிலையில், ஸ்டாலினை உடல் மொழி அல்லது பேச்சு மூலம் அவமதிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் நடந்து கொண்டிருந்தால் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ‘I AM SORRY’ சொல்ல வேண்டும்” என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது. இதனால், விஜய்–ஸ்டாலின் இடையேயான அரசியல் மோதலைத் தொடர்ந்து ஜவாஹிருல்லாவின் விமர்சனமும் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை பேச்சால் வெடித்த அரசியல் மோதல்! முதல்வர் விஜய்க்கு எதிராக களமிறங்கிய திமுக!