அடேங்கப்பா.... கோடியில் வாழ்க்கை! தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்.. சொத்து மதிப்பை பார்த்து வாயடைத்துப்போன அரசியல் களம்..!!!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. தேர்தல் அரசியல் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த விவரங்கள் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன.
சொத்து மதிப்பில் முதலிடத்தில் இசக்கி சுப்பையா
வெளியாகியுள்ள தகவலின்படி, இசக்கி சுப்பையா ₹4,19,13,04,000 மதிப்பிலான சொத்துகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம், அவருக்கு ₹5,75,66,000 அளவிலான கடனும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் சி. விஜயபாஸ்கர் ₹51,95,54,000 மதிப்பிலான சொத்துகளையும், ₹25,18,63,000 கடனையும் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: விலகின கையோடு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! ராஜினாமாவுக்கு அளித்த அதிரடி விளக்கம்... செம ஷாக்கில் எடப்பாடி..!!!
மற்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள்
இந்தப் பட்டியலில் எம்.ஆர். விஜயபாஸ்கர் ₹18,54,39,000 மதிப்பிலான சொத்துகளுடன் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து சத்தியபாமா ₹12,18,90,000, ஜெயக்குமார் ₹8,74,19,000 மற்றும் மரகதம் குமரவேல் ₹3,07,65,000 மதிப்பிலான சொத்துகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மரகதம் குமரவேல் குறைந்த சொத்து மதிப்பைக் கொண்டவராக உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் இணைந்த பிறகு அதிகரித்த கவனம்
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள இந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விவரங்கள் அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன. மாற்று அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள இவர்களின் பின்னணி மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாக அரசியல் வட்டாரங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: BREAKING: திடீரென ஒட்டுமொத்த அரசியலில் இருந்தும் விலகிய தவெகவின் முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் CM விஜய்..!!!