மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்!

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்!


farmer-gold-loan-offer---mk-stalin---dmk

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

சமீபத்தில் வெளியான திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.

dmk

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருப்பூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் சுப்பராயனை ஆதரித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூாில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பேசிய அவர்: 

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் 5 பவுன் வரையில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கான நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டம் திமுகவின் தோ்தல் அறிக்கையில் சோ்க்கப்படும் என்று அவா் தொிவித்தார். இதனைக் கேட்ட அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.