சவால் விட்டதும் அதிரடி காட்டின CM விஜய்! வேலையே செய்யாமல் ரூ.3.23 கோடி அவுட்... எ.வ.வேலு வீட்டில் லட்ச ஒழிப்புத்துறை ரெய்டு..! இரவோடு இரவாக நடந்த பணிகள் அம்பலம்... தமிழகத்தையே உலுக்கும் ஊழல்..!!!



ev-velu-dvac-corruption-case-highways-department

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சென்னை, திருவண்ணாமலை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

ரூ.7 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு புகார்

இந்த வழக்கின் பின்னணி 2022-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் அளித்த புகாருடன் தொடர்புடையது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்துக்கு உட்பட்ட கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக 'சங்கரானந்த் இன்ஃப்ரா' நிறுவனத்திற்கு சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார். மேலும், எந்த சாலைப் பணியும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே 2022 மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.3.23 கோடி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிரடி காட்டும் விஜய்! விஜய்யின் "ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்டால் "அலறும் திமுக..... EX அமைச்சர்கள் 5 பேர் கைது? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்...!!!

விசாரணை, பணியிடை நீக்கம் மற்றும் புதிய நடவடிக்கை

புகார் வெளியானதைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஈரோடு நபார்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில், ஆதாரங்களை மறைக்கும் நோக்கில் இரவோடு இரவாக சாலைப் பணிகள் மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டதாகவும் புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அப்போது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11 பேர் மீது வழக்கு; பல இடங்களில் சோதனை

தற்போது தவெக ஆட்சிக்காலத்தில், கடந்த கால ஊழல்கள் குறித்து சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது திமுகவினர் “தைரியமிருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள்” என முதலமைச்சர் விஜய்க்கு சவால் விடுத்தனர். இந்த சவாலை ஏற்று, அறப்போர் இயக்கத்தின் புகார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு கடந்த ஜூன் 23 அன்று அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து அரசு வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 24-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, திருவண்ணாமலை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!