19 வயதில் போதைப்பழக்கம்.. நெஞ்சு வலியால் துடித்த இளம்பெண்.. சேலத்தில் ஷாக்.. கூடா நட்பு கேடில் முடிந்த சோகம்.!
தவறான சவகாசத்தால் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானதாகவும் புகார் எழுந்துள்ளது.
போதை மாத்திரை:
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். இவரிடம் நடந்த விசாரணையில், இளம்பெண் போதை மாத்திரைக்கு அடிமையான நபர் என்பது உறுதியானது.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கொடுமை.. பெண்கள் வெளியே வரவேகூடாதா? 2 முதியவர்கள் சேர்ந்து அதிர்ச்சி செயல்.!
3 மாதமாக பழக்கம்:
இவர் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசியால் ஏற்றுக்கொள்வது உறுதியானது. கடந்த 3 மாதமாக பெண் இதனை பயன்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், தகவல் அறிந்து நேரில் வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தவறான நட்பு:
அப்போது, இளம்பெண்ணின் நண்பர்களான பூபதி (வயது 23), அஜித் (வயது 19) ஆகியோர் சேர்ந்து பெண்ணுக்கு போதைப்பழக்கத்தை பயிற்றுவித்தது தெரியவந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டபோது 30 போதை மாத்திரையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் ஒன்றாக போதை மருந்தை உபயோகம் செய்து வந்துள்ளனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியபோது பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது. இவர்களின் கூட்டாளிகளில் ஒருவரான விஜியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கஞ்சா போதையில் துணிகரம்:
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் மீமீசலில், 10ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றபோது, 19 வயதுடைய பைசல் கான் என்ற இளைஞர் சிறுமிக்கு நடுவழியில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்கள் வந்து கஞ்சா போதையில் இருந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் இளைஞரை போக்ஸோவில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: #JUSTIN: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. 'தீப்பெட்டி கேட்பதாக நடித்து துணிகரம்' காம கொடூரனுக்கு தர்ம அடி..!