90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
நான் வெடிகுண்டு வீசவா? சீமானின் சர்ச்சை பேச்சு.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில், வரும் பிப்ரவரி மாதம் 05 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் மாநிலத்தில் ஆளும் திமுக கட்சியின் வேட்பாளராக சந்திர குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர் முத்துசாமி வீதி-வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக Vs நாதக மோதல்
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உட்பட பல கட்சிகள் தேர்தலில் பங்கேற்கவில்லை. நாம் தமிழர் கட்சி திமுகவை எதிர்த்து களம்காணும் நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி களத்தில் இருக்கிறார். அவருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் - வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன்.!
வெடிகுண்டு வீசுவேன்
இதனிடையே, நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய சீமான், "உங்களின் பெரியார் வெங்காயம் வைத்துள்ளார். என் தலைவன் பிரபாகரன் வெடிகுண்டு வைத்துள்ளார். நீ வெங்காயத்தை வீசினால், நான் வெடிகுண்டை வீசுவேன். நான் வீசிய பின்னர் என்னவாகும் என தெரியும். நீ என்ன ஆவாய்? வீசி பார்ப்போமா?" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: திமுக என்றாலே உருட்டு, இருட்டு.. சீமான் பரபரப்பு பேச்சு.!