காங்கிரஸ்சின் மனதை குளிர்விக்க கள்ள மவுனம் காக்கும் விஜய்! கூட்டத்திற்கு நாங்க ரெடி .... எங்க கண்டிஷன்கு நீங்க ரெடியா? பரபரக்கும் அறிக்கை.!!!!



dmk-conditions-for-mp-meeting-on-delimitation

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் விஜய் நாளை (ஆகஸ்ட் 8) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயார் என்றும், அதே நேரத்தில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையையும் முன்வைத்துள்ளார்.

நியாயமான தொகுதி மறுசீரமைப்பே திமுகவின் நிலைப்பாடு

வெளியிட்டுள்ள அறிக்கையில், 'Fair Delimitation' எனப்படும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் திமுக ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: அடுத்த பிடிவாரண்ட்.... செப்டம்பர் 2-க்குள் பொன்முடியைக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் திமுக இன்றும் உறுதியாக இருப்பதாகவும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா இடம்பெறாத நிலையில் இதுகுறித்து திமுகவுக்கு அறிவுரை வழங்க எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் முன்னெடுத்த முயற்சியை சுட்டிக்காட்டிய துரைமுருகன்

தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தேசிய அளவில் முதன்முதலில் எடுத்துரைத்து, அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தான் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், தமிழக அரசு கூட்டியுள்ள எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்ய எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கோரிக்கை

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் ஒற்றுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவாதிக்கவும் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

மேலும், காங்கிரஸின் மனதைக் குளிர்விப்பதற்காக மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கள்ள மவுனம் காப்பதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை காரணமாகக் காட்டி அரசு கவனத்தை திசைதிருப்பும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும், காவிரி உரிமையை பாதுகாப்பதற்கும் மேகதாது அணைத் திட்டத்தைத் தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கை அவசியம் என்பதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்பதே திமுகவின் முக்கிய கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: இனி இதுதான் நடக்கப்போகுதா? ராகுல் - விஜய் இணையும் புதிய கூட்டணி.... அடுத்தக்கட்ட அரசியல் ஆலோசனை! தலைகீழாக மாறப்போகும் தமிழக அரசியல்..!!!