"நன்றிகெட்ட நாய்கள்.. தூக்கி அடிங்க" - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு.. அனல்பறக்கும் அரசியல்களம்.!
நீங்கள் வளர, குடும்பம் முன்னேற கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்து சென்றவர்களை தெய்வம் நின்று பாடம் கற்பிக்கும் என முன்னாள் அமைச்சர் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கிழக்கு & மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பாக கட்சி நிர்வாகிகள் இடையே பேசி இருந்தார்.
புரட்சி எங்கே?
அவர் பேசியவாதவது, "அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த விவகாரத்தில் மிகப்பெரிய பேரம் நடந்துள்ளது. ரூ.50 கோடி பணம் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் எம்.எல்.ஏ சீட் பெரும் ஆசையில் இருக்கிறார்கள். இது ஊரா? நாடா? எதுவுமே புரியவில்லை. இவர் (விஜய்) வந்து சொன்னதும் மக்கள் மீண்டும் வாக்களித்துவிடுவார்களா? இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் அமைச்சர்கள் ஆவர்களாம்? இதில் புரட்சி எப்படி வரும்.
இதையும் படிங்க: TVK Vijay Vs Edappadi Palanisamy: 'விஜய் ஒரு ஊழல்வாதி' - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!

நன்றிகெட்ட நாய்கள்:
குதிரை பேரம் குறித்த விவகாரத்தை ஆளுநரிடம் கூறி இருக்கிறோம். சட்டம் தனது கடமையை செய்யும். அதிமுகவினர் ரத்தம் சிந்தி எம்.எல்.ஏ ஆக்கினாள், ராஜினாமா செய்து இருக்கின்றனர். இவர்கள் எந்த தொகுதியில் தேர்தலில் நின்றாலும் கையில் கிடைத்த பொருளை எடுத்து அடியுங்கள். இவர்களை வெற்றிபெற விடக்கூடாது. நன்றிகெட்ட நாய்கள். நீங்கள் வளர, உங்களின் குடும்பம் வளர கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். கட்சியை காட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றவர்கள் வாழ்வே தகுதி இல்லாத நபர்கள். துரோகத்துக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். மன்னிப்பு கேட்ட நபர்களுக்கு மன்னிப்பும் கொடுத்தோம். மாவட்ட செயலாளர் பதவி கேட்கிறார்கள். அதனை நீங்கள் சொல்லக்கூடாது, மறுபடியும் வந்தால் நியாயமான பதவி கிடைக்கும்.

ஆண்மையை நிரூபித்தார்:
துணைப்பொதுச்செயலாளர், அமைப்பு செயலாளர் பதவிகள் எல்லாம் ரோட்டில் செல்லும் பதவிகளா? சி.வி. சண்முகம் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமியின் ஆண்மையை காட்ட சொல்கிறார். அவர் ஆண்மையை நிரூபித்துத்தான் மிதுன் என்ற மகனை வைத்துள்ளார். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நிச்சயமாக நின்று கொல்லும். ஜெயலலிதா கொடுத்த மரியாதையை ஒவ்வொருவருக்கும் எடப்பாடி பழனிசாமியும் கொடுக்கிறார். பலகோடிகள் சொத்து வைத்துள்ள நடிகர் முதல்வரான பின் கரூரில் 41 பேருக்கு வேலை கொடுத்துள்ளார். அவரின் சொந்த செலவில் கொடுத்தால் பாராட்டுவார்கள். அரசனை பணத்தை கொடுப்பது வாழ்க்கையா?" என பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: 'உதிர்ந்த ரோமங்கள்' அதிமுக Vs தவெக விவகாரம்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டம்.. பரபரப்பு பேட்டி.. முழு விபரம்.!