TVK Vijay Vs Edappadi Palanisamy: 'விஜய் ஒரு ஊழல்வாதி' - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!



Vijay Is a Corrupt Person Says Edappadi K Palanisamy in Sharp Attack on TVK Leader

கரூர் துயரத்துக்கு பின் கட்சியே 15 நாட்கள் இருக்கிறதா? என்ற தடயம் இல்லாமல் போனது. இவர்கள் தலைவர்களாக எப்படி செயல்படுவார்கள்? என எடப்பாடி பழனிச்சாமி கடும் கேள்வியை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (பிப்.08) தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதனைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவெக தலைவர் விஜயை தாக்கி பேசினார்.

விஜய் மீது விமர்சனம்:

இதுதொடர்பாக அவர் பேசுகையில், "விஜய் ரூ.1.50 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையிலேயே அவர் ஊழல்வாதி என்பது உறுதி செய்யப்பட்டது. விஜய் வெளியே வந்ததில்லை. கட்சியை தொடங்கினார், நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. சம்பவம் நடந்ததும் 72 நாட்கள் வெளியே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்ததும் கட்சி தலைவர் என்ற முறையில் அவர் வெளியே வந்திருக்க வேண்டும். தீர்வு கண்டிருக்க வேண்டும். அவரின் கட்சி அலுவலகம் 15 நாட்களாக மூடப்பட்டு இருந்தது. கட்சியே மூடப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதுதான் நிலைமை.

இதையும் படிங்க: Edappadi Palanisamy: அரசு ஊழியர்களுக்கு மிட்டாய் கொடுத்த திமுக அரசு - எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் தாக்கு.!

TN politics

திமுக அரசு திட்டத்தை தொடங்க மறுக்கிறது:

15 ஆண்டுகளாக திமுக கூட்டணி மத்தியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது. அவர்கள் செய்தது என்ன? அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு அறிவித்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை திமுக அரசு தொடங்கி வைக்க மறுக்கிறது. இதனால் திட்டங்கள் முடக்கப்படுகிறது. நீதிமன்றம், ரயில்வே, சாலை என பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி கொடுத்ததும், திமுக அரசின் ஒத்துழைப்பின்மை காரணமாக அனைத்தும் முடங்கி இருக்கிறது. ஆனால், வேண்டும் என்றே மத்திய அரசை குறைசொல்லி முதல்வர் மு.க. ஸ்டாலின் வஞ்சகம் செய்கிறார்" என பேசினார்.