அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது; நயன்தாரா வந்தாலும் ரசிகர்கள் கூடுவார்கள்... " விஜய் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு.!!
கடந்த சனிக்கிழமை திருச்சியின் பிரதான காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பொதுக்கூட்டம் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றியிருக்கிறது. தவெக தலைவர் விஜய்யை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கூடியதில் காந்தி மார்க்கெட் பகுதியே ஸ்தம்பித்துப் போனது. இந்நிலையில் சினிமா நட்சத்திரத்திற்காக கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்களுக்கு கூட்டம் கூடுவது இயல்பானது. கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் விஜய்க்கு வாக்களிக்கமாட்டார்கள். திரையில் பிரபலமாகயிருக்கும் தம்பி விஜய்யை காண கூட்டம் கூடுவது இயல்பான ஒன்றுதான். தல அஜித் அரசியலில் இறங்கினால் இதை விட அதிகமான கூட்டம் அவரைக் காண வரும். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் வந்தாலும் அவர்களைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருவார்கள். இதையெல்லாம் அரசியல் எழுச்சியாக பார்க்க முடியாது.

விஜய்யின் முதல் பிரச்சாரக் கூட்டம் தமிழகத்தில் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கே கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. முதல் பிரச்சாரக் கூட்டத்திற்கு லட்சக்கணக்கான தொண்டர்களையும் ரசிகர்களையும் விஜய் திரட்டியிருப்பது 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஒரு நடிகரின் நட்சத்திர அந்தஸ்தை வைத்து கூட்டம் கூடுவது எல்லாம் வாக்காக மாற வாய்ப்பில்லை என சீமான் தெரிவித்திருக்கிறார். சனிக்கிழமை மட்டும் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பது குறித்து சீமான் விமர்சித்திருந்த நிலையில் தற்போது விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தையும் அவர் விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "கொடி கம்பமே நட தெரியல நீங்க அடுத்த முதல்வரா..." நடிகர் விஜய்க்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.!!
இதையும் படிங்க: "6 நாள் மனப்பாடம் பண்ணா தான் சனிக்கிழமை பிரச்சாரம்..." விஜய்யை கலாய்த்த சீமான்.!!