அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"6 நாள் மனப்பாடம் பண்ணா தான் சனிக்கிழமை பிரச்சாரம்..." விஜய்யை கலாய்த்த சீமான்.!!
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் குறித்து கூறியிருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரம் வருகை புரிந்த சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை சரமாரியாக விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய சீமான், விஜய் சனிக்கிழமை மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். வாரத்தின் 6 நாட்களிலும் மனப்பாடம் செய்து அதனை தனது ரசிகர்களுக்கு பேசி காட்டுவதற்கு விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் விஜய் 10 நிமிடம் மட்டுமே தனது பிரச்சாரத்தில் பேச அனுமதி கேட்டதை சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சீமான், ஒரு அரசியல் கட்சியின் தலைவரால் 10 நிமிடத்தில் என்ன பேசிவிட முடியும். தங்களது கட்சியின் கொள்கையை 10 நிமிடங்களில் விளக்க முடியுமா.? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் வேலு நாச்சியார் மற்றும் காமராஜர் ஆகியோரை தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக வைத்திருக்கும் விஜய் அவர்களை பற்றி 10 நிமிடம் பேச முடியுமா.? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: "ஓட்டுக்காக கேப்டனை பயன்படுத்தும் விஜய்.." சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்.!!
நடிகர் விஜயும் நானும் அண்ணன் தம்பி போன்றவர்கள். ஆனால் கட்சி கொள்கை என்று வரும்போது எங்களிடம் முரண்பாடு தோன்றுகிறது எனவும் சீமான் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தார். அவரையும் நாம் தமிழர் கட்சி முந்தி சென்றது. தற்போது விஜய் வந்திருக்கிறார். அவரையும் நாங்கள் முந்தி சென்று கொண்டிருப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவை தங்களது கொள்கை எதிரி என கூறும் தமிழக வெற்றிக் கழகம் எந்த அடிப்படையில் கொள்கையில் முரண் என்பதையும் விளக்கிக் கூற வேண்டும் எனவும் சீமான் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: "விஜய்-க்கு மூளையில் கோளாறு; அவர் முகத்துல குத்தணும்..." நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு.!!